Posts

Showing posts from 2018

திருத்தணி கோயிலில் இன்று...

Image
நான் பிறந்த தேதியும், பிறந்த நட்சத்திரமும் ஒரே நாளில் இன்று ஒன்றாக வந்தது. இதனை முன்னிட்டு குடும்பத்துடன் திருத்தணி சென்று வந்தோம். திருத்தணிகை முருகனை சஷ்டி தினத்தன்று தரிசிக்கும் பாக்கியம் இன்று வாய்க்கப்பெற்றேன். மனம் பூரிப்படைந்தது. ஆனால்... மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நூற்றைம்பது ரூபாய், நூறு ரூபாய் , இருபத்தி ஐந்து ரூபாய் என்று பல கட்டணங்கள் என் அப்பன் முருகனை தரிசிக்க. வியாபாரம் அமோகமாக நடக்கிறது. வயதான தாய் தந்தையர், வெயில், சிறு குழந்தை, நவராத்திரி ஆகியபடியால் மாலைக்குள் சென்னையில் வீட்டில் இருக்கவேண்டும் என்று மனைவியின் வேண்டுகோள், ஆகிய காரணங்களால் வேறு வழியில்லாமல் நூறு ரூபாய் சிறப்புக்கட்டணம் கொடுத்து தரிசனம் பெற்றோம். நூற்றைம்பது ரூபாய் கொடுங்கள் எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம். நேரே கர்ப கிருஹத்தில் தரிசனம் செய்விக்கிறேன் என்று பேரம் பேசினார் ஒரு கோயில் சிப்பந்தி சிகாமணி. ஆகமமாவது விதியாவது. பயமாவது, பக்தியாவது. இது கர்ப கிருஹம் பற்றி. காரிலிருந்து இறங்கி கோயில் வரை சிறிது மலைப்பாங்கான பாதை. அதனை நடந்து கடக்க, மேற்கூரையுடன் பாதை போடப்பட்டுள்ளது.

ஸ்வாமி ரகுநாதாநந்தர் – தெய்வமே தேடி வந்து அருள்புரிந்த மகாத்மா

Image
ஸ்வாமிஜி பெரியப்பா என்று எனக்கு சிறுவயதில் எனது பெற்றோரால் அறிமுகம் செய்து வைக்கப்பட்ட , ராமக்ருஷ்ண மடத்தின் ஸ்வாமி ஶ்ரீ ரகுநாதாநந்தர் (1930-2018) இன்று நம்மிடையே இல்லை.   தனது எண்பத்து நான்காவது வயதில் 2018 அக்டோபர் ஒன்றாம் தேதி பரம்பொருளுடன் ஒன்றினார். முன்னதாக , செப்டம்பர் மாதம் 21 தேதி ஸ்வாமிஜியின் கடைசி சகோதரரான எனது தந்தையுடன் (ஶ்ரீ எஸ் எஸ் மகாதேவனுடன்) பேலூர் -கல்கத்தா சென்று ஐ.சி.யூ.வில் சிகிச்சை பெற்றுவந்த அவரை தரிசித்தேன். அவருடன் பேச நானும் எனது தந்தையும் முயன்றோம். அவர் காதருகில் வேத மந்திரங்களை உச்சரித்தேன். அவர் பாதம் பணிந்தேன். அவர் உடல்நிலையில் முன்னேறம் காண்பது மிக அரிது என்று அறிந்து    கடைசியாக கனத்த இதயத்துடன் சென்னை திரும்பினேன்.  த்வாவிமௌ புருஷௌ லோகே ஸூர்யமண்டலபேதினௌ | பரிவ்ராட் யோகயுக்தஶ்ச ரணே சாபிமுகோ ஹத: || இரண்டு விதமான மனிதர்கள் ஸூர்யமண்டலத்தை கடந்து பரம்பொருளுடன் ஒன்றுவார்கள். ஒருவர் வைராக்கியசாலியான , யோகமார்கத்தில் நிலைத்த ஸந்நியாஸி. மற்றொருவர் நேருக்கு நேர் போர்புரிந்து போர்க்களத்தில் உயிர்துறந்த வீரர். சாஸ்த்ரங்களில் சிறிது அற

विश्वसंस्कृतसम्मेलने (WSC) संस्कृतविदुषां Hooliganism - यन्मम प्रत्यक्षं तत् भवतां समक्षम्।

Image
नमः सर्वेभ्यः विश्वसंस्कृतसम्मेलने अस्मत्संस्कृतमिति गोष्ठ्याम् संस्कृतज्ञैः सभासद्भिः hooliganism प्रकटितम् इति सम्मेलनस्य समायोजकेन अधीशमहोदयेन कुत्रचित् लिखितं दृष्ट्वा तद्विषये मम प्रतिस्पन्दं प्रकटयितुम् इच्छामि। ( https://groups.google.com/forum/#!searchin/bvparishat/hooliganism%7Csort:date/bvparishat/QH0IpCzVFbU/HurcH6fSDgAJ ) - I found the hooliganistic behaviour of some members of the audience to have been shocking, inexcusable, and deeply disturbing. तस्यां सभायां वेदिकायाम् उपरि स्थितानां विचाराः प्रकटिताः hooliganism इत्यादिपदप्रयोगैः। अधुना सभायां अधः निविष्टानां पक्षतः अस्मत्संस्कृतगोष्ठीविषये मम संस्कृतभषया अहं लिखामि। सभायाम् अहमपि उपविष्टः आसम्। अतः तत्र यत्प्रवृत्तं तन्मम प्रत्यक्षम्। तत् भवतां समक्षं यथास्मृति प्रस्तौमि।   "अस्मत्-संस्कृतम्" इति गोष्ठ्याः शीर्षकम्। तत्र संस्कृतं न कस्यापि आसीत्। न कापि व्यक्तिः वेदिकाम् अलङ्कुर्वाणा संस्कृतेन अभाषत! कीदृशं विडम्बनमिदम्! आयोजकानां दोषः तत्रादौ - अधीशमहोदयः प्रष्टव्यः- तस्य