திருத்தணி கோயிலில் இன்று...
நான் பிறந்த தேதியும், பிறந்த நட்சத்திரமும் ஒரே நாளில் இன்று ஒன்றாக வந்தது. இதனை முன்னிட்டு குடும்பத்துடன் திருத்தணி சென்று வந்தோம். திருத்தணிகை முருகனை சஷ்டி தினத்தன்று தரிசிக்கும் பாக்கியம் இன்று வாய்க்கப்பெற்றேன். மனம் பூரிப்படைந்தது. ஆனால்... மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நூற்றைம்பது ரூபாய், நூறு ரூபாய் , இருபத்தி ஐந்து ரூபாய் என்று பல கட்டணங்கள் என் அப்பன் முருகனை தரிசிக்க. வியாபாரம் அமோகமாக நடக்கிறது. வயதான தாய் தந்தையர், வெயில், சிறு குழந்தை, நவராத்திரி ஆகியபடியால் மாலைக்குள் சென்னையில் வீட்டில் இருக்கவேண்டும் என்று மனைவியின் வேண்டுகோள், ஆகிய காரணங்களால் வேறு வழியில்லாமல் நூறு ரூபாய் சிறப்புக்கட்டணம் கொடுத்து தரிசனம் பெற்றோம். நூற்றைம்பது ரூபாய் கொடுங்கள் எந்த வரிசையிலும் நிற்க வேண்டாம். நேரே கர்ப கிருஹத்தில் தரிசனம் செய்விக்கிறேன் என்று பேரம் பேசினார் ஒரு கோயில் சிப்பந்தி சிகாமணி. ஆகமமாவது விதியாவது. பயமாவது, பக்தியாவது. இது கர்ப கிருஹம் பற்றி. காரிலிருந்து இறங்கி கோயில் வரை சிறிது மலைப்பாங்கான பாதை. அதனை நடந்து கடக்க, மேற்கூரையுடன் பாதை போடப்பட்டுள்ளது....