பதிலளிப்பதில் நுட்பங்கள் - ரிஷி ஆருணி நமக்கு வழிகாட்டுகிறார்
பதிலளிப்பதில் நுட்பங்கள் - ரிஷி ஆருணி நமக்கு வழிகாட்டுகிறார் முனைவர் ம ஜயராமன் அறிமுகம் கடந்த முறை “ கேள்வி படுத்திய பாடு ” என்று - கேள்வி தொடர்பான உபநிடத கருத்துக்களை பார்த்தோம். இப்போது உபநிடதங்கள், பதிலளிக்கும் விதம் பற்றி என்ன கூறுகின்றன என்பதனை கவனிப்போமா ? சாந்தோக்கிய உபநிடதம் சாமவேதத்தின் ஒரு பகுதியாகும். இந்த வேதப் பகுதியின் ஆறாவது அத்தியாயத்தில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே நடந்த ஒரு உரையாடல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் பதிலளிக்கும் விதம் பற்றி பார்ப்போம் தந்தையின் கேள்வியும் மகனின் கர்வம் மிகுந்த அறியாமையும் தந்தை ஆருணி சுற்றுபிரயாணங்களில் ஈடுபட்டதால் , தாமதமாக பன்னிரெண்டாவது வயதில் தான் மகனான சுவேதகேதுவை தகுந்த குருவிடம் படிக்க அனுப்புகிறார். தனது மகன் படிக்காமல் தற்குறியாக ஆகிவிடக்கூடாது என்பது அவரது கவலை. பன்னிரெண்டாவது வயதில் குருகுலவாசம் செய்யத்துவங்கிய சுவேதகேது பன்னிரெண்டு ஆண்டுகள் குருகுலவாசம் முடிந்து தனது இருபத்தி நான்காவது வயதில் வீடு திரும்ப...