ஒரு கேள்வி படுத்திய பாடு! (கல்வியியல் தொடர்பான கட்டுரை)
ஒரு கேள்வி படுத்திய பாடு! முனைவர் ம ஜயராமன் (வித்யாபாரதியின் - வித்யாவாணி மாத இதழில் (ஜனவரி 2022 ) கல்வி பற்றி - வெளியான என் கட்டுரை கால-யந்திரத்தில் பயணம் அரையாண்டு விடுமுறைக் காலம் அல்லவா. கொரோனா ஊரடங்கு தான் இல்லையே! சிறிது சுற்றுப்பயணம் செல்லலாமே! கால-யந்திரத்தில் பயணம் செய்வோம். சில ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிச் சென்று ஒரு தபோவனத்தை அடைகிறோம். இது சுகேஷ முனிவரின் ஆசிரமம். ஆ! அங்கு யார் தேரில் வந்து இறங்குவது ? ஹிரண்யநாபன் எனும் இளைஞனின் தேர் தான் ஆசிரமத்திற்கு வெளியில் வந்து நிற்கிறது. ஆசிரமத்திற்கு உள்ளே நுழைந்து , சுகேஷ முனிவரை வணங்கி நிற்கும் ஹிரண்யநாபனை நாம் பார்க்கிறோம். அவன் கூறுகிறான் - "முனிவரே! பதினாறு கலை புருஷன் (ஆன்மா) பற்றி எனக்கு உபதேசித்து அருளுங்கள்" . சுகேஷ முனிவர் கூறுகிறார் " ஹிரண்யநாபா! இது பற்றி எனக்குத் தெரியாது." நம்பிக்கையின்றி அங்கேயே தயங்கி நிற்கிறான் ஹிரண்யநாபன். அவனது தயக்கத்தின் காரணத்தை உணர்ந்த சுகேஷ முனிவர் கூறுகி...