என் ருக்மணி பாட்டியும் - சைதன்யருடைய தாய் சசிதேவியும்
அன்னையர் தின பதிவு என்னுடைய தந்தையாருடைய பெரிய அண்ணா 1950 களில் ராமகிருஷ்ணமடத்தில் துறவியாவதற்காக சேர்ந்தார். எனது தாத்தா, (பூர்வாசிரம) பெரியப்பாவை வீட்டிற்கு திரும்ப அழைத்துவர பல முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் அசாத்தியாமான பரிபக்குவம் கொண்டிருந்த என் பாட்டியோ - எனது அப்பாவிடம் ஒரு தேங்காயைக் கொடுத்து " போ! உனது அண்ணன் எந்த குழப்பமும் இன்றி துறவு வாழ்வில் நல்லபடியாக ஈடுபட வேண்டும் என்று ப்ரார்த்தனை செய்து கொண்டு இந்த தேங்காயை பிள்ளையார் கோவிலில் உடைத்து விட்டு வா என்றாராம்" சைதன்யமகாப்பிரபுவின் தாயார் பற்றி படிக்கும் போது எனது பாட்டியை பற்றி என் அப்பா கூறிய இந்த செய்தி நினைவுக்கு வந்தது. சைதன்ய மஹாப்ரபுவின் தாயார் சசி தேவி. சைதன்யர் ஸந்நியாஸம் வாங்கிக் கொள்வதற்காக 1510 ஆம் ஆண்டு ஒருநாள் இரவில் யாரும் அறியாமல் வீட்டைவிட்டுச் சென்றார். பல மைல் தூரம் நடந்து வேறு ஒரு கிராமத்திற்குச் சென்றார். மிகவும் மன்றாடி அடுத்தநாள் கேசவ பாரதியிடம் ஸந்நியாஸம் பெற்றார். அங்கிருந்து ப்ருந்தாவனம் நோக்கி பயணித்தார். அவரது சீடர்கள் பலர் அவரைப் பின்தொடர்ந்து சென்று ...