Posts

Showing posts from April, 2018

தேவை தேரூழியம்! - கபாலீச்வரர் தேர்

Image
நேற்று (28/03/2018) மயிலை அருள்மிகு கபாலீச்வரர் தேரோட்டம்.   மிகக் கோலாகலமாக நடைபெற்றது. இது பற்றி ஒரு விஷயம் மனதில் பட்டது.   பகிர்கிறேன். என் பள்ளி பருவத்திலிருந்தே இந்த உற்சவத்தில் கலந்து கொண்டுவருகிறேன் (1996). இம்முறை தேரோட்டத்தின் போது அவ்வளவு கூட்டமில்லை என்று தோன்றியது. மாடவீதிகளில் மக்கள் கூட்டம் இருந்தது. ஆனால் , மந்தைவெளி போன்ற அக்கம்பக்க பகுதிகளில் தேரோட்டத்தினைப் பற்றி அவ்வளவு ஆர்வமும் , உற்சாகமும் இல்லையோ என்று தோன்றியது. (என் கணிப்பு தவறாக இருக்கலாம்)   உற்சவத்தில் உற்சாகக் குறைவு ? மக்கள் தங்களது அன்றாட அலுவல்களில் என்றும் போல தூங்கி வழிந்ததாகத் தோன்றியது. பள்ளிச் சிறுவர்கள் முதுகில் பொதி மூட்டையைச் சுமந்து கொண்டு வேண்டா வெறுப்பாக பள்ளி செல்லும் அன்றாட காட்சி தேர்த்திருவிழா அன்றைக்கும் காணமுடிந்தது. அன்றாட அலுவல்களில் சிக்கிச் சுழலும் அண்டை அயலாரையும் காணமுடிந்தது.    “ஊர்கூடித் தேரிழுக்க வேண்டும்” என்றெல்லாம் பழமொழி உள்ளது. ஊர்த்திருவிழாவின் போது ஊரே    திரண்டு கொண்டாட வேண்டாமா ? இது பக்தி , புண்ணியம் இவற்றிற்கா...